/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குகையில் பக்தர்கள் வெள்ளம் களைகட்டிய வண்டி வேடிக்கை
/
குகையில் பக்தர்கள் வெள்ளம் களைகட்டிய வண்டி வேடிக்கை
குகையில் பக்தர்கள் வெள்ளம் களைகட்டிய வண்டி வேடிக்கை
குகையில் பக்தர்கள் வெள்ளம் களைகட்டிய வண்டி வேடிக்கை
ADDED : ஆக 09, 2024 02:27 AM
சேலம்: குகை மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை, பக்தர்கள் வெள்-ளத்தில் களைகட்டியது.
சேலம், குகை மாரியம்மன், காளியம்மன் கோவிலில் ஆடித்திரு-விழா நடந்து வருகிறது. அதன் சிறப்பம்சமாக, குகை மாரி-யம்மன் கோவில் விழா குழுவினர் சார்பில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், 20க்கும் மேற்பட்ட குழுவினர், வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில், புராண, இதிகாசங்களை நினைவுபடுத்தும்படி, அந்த கதாபாத்திர வேடம் அணிந்து வீதி உலா வந்தனர். குறிப்பாக கிரி அம்மன் வண்டி வேடிக்கை நண்பர் குழு சார்பில் ஈஸ்வரன், ஈஸ்வரி, விநாயகர், முருகன், நாரதர் போன்று வேடம் அணிந்து வந்தனர். அதேபோல் குகை ஆண்டிசெட்டி தெரு வண்டி வேடிக்கை விழா குழு சார்பில் மீனாட்சியை சுந்தரேஸ்வரருக்கு திருமணம் செய்து வைக்கும் காட்சி; ஐய்யனார் பெருமாயி அம்மாள் குழு சார்பில் லட்சுமி நாராயணன் சமேத நாரதர் காட்சி; பிள்ளையார்பட்டி நண்பர் குழு சார்பில் பஞ்ச பாண்டவர்கள், பாஞ்சாலி காட்சி; அம்பலவாணர் சுவாமி கோவில் தெரு வண்டி வேடிக்கை கமிட்டி சார்பில் பெருமாள், லட்சுமி காட்சி; பராசக்தி வண்டி வேடிக்கை நண்பர் குழு சார்பில் ஆதி சிவனாகிய ஐசவரேஸ்வரர் குபேர-ருக்கும், லட்சுமி தாயாருக்கும் பொன், பொருள் செல்வங்களை அள்ளித்தரும் காட்சி; குகை கார்கானா ஜிக்கா பக்கா நண்பர் குழு சார்பில் நந்தியம் பெருமான் அவதாரம்; செங்கல்பட்டி வீரக்குமா-ரர்கள் வண்டி வேடிக்கை குழு சார்பில் அஷ்டலட்சுமி அவதாரம் உள்பட பல்வேறு வேடங்கள் அணிந்து ஊர்வலமாக வந்தனர்.
இந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை காண, பல்வேறு மாவட்-டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்ட குழுவினருக்கு விழா கமிட்டி சார்பில்
பரிசுகள் வழங்கப்பட்டன.