/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மண்டல குழு முன்னாள் தலைவர் மர்ம கும்பலால் வெட்டி கொலை
/
மண்டல குழு முன்னாள் தலைவர் மர்ம கும்பலால் வெட்டி கொலை
மண்டல குழு முன்னாள் தலைவர் மர்ம கும்பலால் வெட்டி கொலை
மண்டல குழு முன்னாள் தலைவர் மர்ம கும்பலால் வெட்டி கொலை
ADDED : ஜூலை 04, 2024 11:07 AM
சேலம்: அ.தி.மு.க.,வை சேர்ந்த, மண்டல குழு முன்னாள் தலைவர், மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
சேலம், சஞ்சீவிராயன்பேட்டை, தாகூர் தெருவை சேர்ந்தவர் சண்முகம், 60. அ.தி.மு.க.,வை சேர்ந்த இவர், கொண்டலாம்பட்டி பகுதி செயலராக உள்ளார். சேலம் மாநகராட்சியில் இருமுறை, மண்டல குழு தலைவராக இருந்துள்ளார். இவருக்கு பரமேஸ்வரி, 45, ராஜேஸ்வரி, 42 என, இரு மனைவிகள், கவின், 18, அரவிந்தன், 18 என, இரு மகன்கள், திருமணமான, 27 வயது மகள் உள்ளனர்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த சண்முகம், நேற்றிரவு, 10:00 மணிக்கு, வீட்டுக்கு செல்வதற்கு சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன் கோவில், 4வது தெரு வழியே மொபட்டில் சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள், அவரை மறித்து, சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அந்த வழியே வந்தவர்கள், அன்னதானப்பட்டி போலீசார், உறவினர்களுக்கு தகவல் அளித்தனர்.உடனே, அ.தி.மு.க.,வினர், உறவினர்கள் என ஏராளமானோர் திரண்டு, உடலை எடுக்க விடாமல், போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். துணை கமிஷனர் மதிவாணன் தலைமையில் போலீசார் பேச்சு நடத்தி, உடலை, பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். அத்துடன் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.