/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சமையல் எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்
/
சமையல் எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்
சமையல் எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்
சமையல் எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்
ADDED : ஜூலை 31, 2024 07:44 AM
சேலம்: சேலம், சின்ன கொல்லப்பட்டியை சேர்ந்தவர் நடேசன், 28. இவர் உள்பட குடும்பத்தினர், 4 பேர், கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன் நேற்று வந்தனர். அப்போது அவர்கள் கொண்டு வந்த சமையல் எண்ணெயை தலையில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். தொடர்ந்து சாலையில் அமர்ந்தனர். அங்கிருந்த போலீசார், அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி சமாதானம் செய்தனர்.
இதுகுறித்து நடேசன் கூறியதாவது:நேற்று(நேற்று முன்தினம்) இரவு வீடு அருகே வந்த நாயை துரத்தினேன். அதை பார்த்த நாயின் உரிமையாளர், வீட்டுக்கு வந்து ஜாதி பெயரை சொல்லி, தகாத வார்த்தையில் திட்டி என் அண்ணியை தாக்கினார். இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. உயிருக்கு பாதுகாப்பு இல்லாததால் தற்கொலைக்கு முயன்றேன். மாவட்ட நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து அவர் புகார் குறித்து போலீசார் விசாரித்தனர்.