/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கேமராவில் சிக்காத சிறுத்தை வனத்துறையினர் ஏமாற்றம்
/
கேமராவில் சிக்காத சிறுத்தை வனத்துறையினர் ஏமாற்றம்
ADDED : ஆக 30, 2024 03:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்:சேலம் மாவட்டம் கொளத்துார், சாம்பள்ளி ஊராட்சி கோம்பைக்காட்டில், கடந்த, 26 இரவு, உத்தரமணி என்பவரது தோட்டத்தில் மேய்ந்த, மூன்று ஆடுகளை, சிறுத்தை கடித்து கொன்றதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் புகாரின்படி, மேட்டூர் வனத்துறையினர், சிறுத்தை உலா வந்த பகுதிகளில், நான்கு கண்காணிப்பு கேமராக்களை நேற்று முன்தினம் பொருத்தினர்.தொடர்ந்து நேற்று, மேட்டூர், கொளத்துார், கண்ணாமூச்சி வன காப்பாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், எந்த விலங்குகளும் சிக்கவில்லை.
மேலும் கேமராக்களிலும் விலங்குகள் எதுவும் பதிவாகவில்லை. இதனால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.