/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொழிலாளர் சங்கம் இன்று போராட முடிவு
/
தொழிலாளர் சங்கம் இன்று போராட முடிவு
ADDED : ஜூலை 01, 2024 03:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: சேலம் பெரியார் பல்கலை தொழிலாளர் சங்கம் சார்பில், அதன் நுழைவாயிலில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. பொதுச்செயலர் சக்திவேல் தலைமை வகித்தார்.
அதில் துணைவேந்தர் ஜெகநாதன் பணி நீட்டிப்பை எதிர்த்து முதல்கட்டமாக வாயிற்முழக்க போராட்டத்தை, ஜூலை, 1(இன்று) மாலை நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் பல்கலை ஆசிரியர் சங்கத்துடன் அடுத்தகட்ட போராட்டம் குறித்து பேச முடிவு செய்யப்பட்டது. அமைப்பு செயலர் கிருஷ்ணவேணி, பல்கலை ஆசிரியர் சங்க தலைவர் வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.