/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தடுப்பு சுவற்றில் மோதி தலைகீழாக கவிழ்ந்த லாரி
/
தடுப்பு சுவற்றில் மோதி தலைகீழாக கவிழ்ந்த லாரி
ADDED : மே 30, 2024 09:43 PM

ராசிபுரம்:சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஜங்களாசமுத்திரத்தை சேர்ந்தவர் சங்கர், 33. இவரது டேங்கர் லாரியை, ஆவின் பால் நிறுவனத்திற்கு ஒப்பந்த முறையில் வாடகைக்கு விட்டிருந்தார். நேற்று காலை சேலத்தில் இருந்து கெங்கவல்லிக்கு லாரியை டிரைவர் மாதவன், 45, ஓட்டி சென்றார்.
ராசிபுரம் புறவழிச்சாலை அணைப்பாளையம் அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்பு சுவற்றில் மோதி தலை கீழாக கவிழ்ந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார். பால் இல்லாமல் லாரி வந்ததால் எவ்வித பாதிப்பும் இல்லை. ஆனால், லாரியின் இன்ஜின் முழுதும் சேதமடைந்தது. ராசிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.