/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏரியில் கழிவை கொட்டி எரித்தவர் சுற்றிவளைப்பு
/
ஏரியில் கழிவை கொட்டி எரித்தவர் சுற்றிவளைப்பு
ADDED : மே 30, 2024 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி, ஓமலுார், பாகல்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன், 26.
இவர் லாரியில், தாரமங்கலம் அருகே உள்ள கடையில் இருந்து காலாவதி இனிப்பு, அதன் கழிவு உள்ளிட்டவற்றை ஏற்றிக்கொண்டு, கொங்கணாபுரம் அருகே வெள்ளாளபுரம் ஏரிக்கரையோரம் நேற்று கொட்டினார். தொடர்ந்து தீ வைத்து எரித்தார். மக்கள், லாரியையும், மணிகண்டனையும் பிடித்து, கொங்கணாபுரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரித்த போலீசார், லாரியை பறிமுதல் செய்து மணிகண்டன் மீது வழக்குப்பதிந்தனர்.