ADDED : செப் 09, 2024 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: சேலம் மாவட்ட எல்லையான தொப்பூர் செக்போஸ்டில் தீவட்டிப்பட்டி போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த அரசு பஸ்சில், 'டெட்ரா பேக்'கில் அடைக்கப்பட்ட மதுபெட்டி இருந்தது
கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் கடத்தி வந்தவர், காடையாம்பட்டி, காருவள்ளியை சேர்ந்த சக்திவேல், 28, என தெரிந்தது. அவரை பிடித்த போலீசார், நேற்று ஓமலுாரில் உள்ள இரும்பாலை மதுவிலக்கு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள், சக்திவேலை கைது செய்தனர்.