/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு முழுவதும் காட்சி அளிக்கும் நந்தி சிலை
/
மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு முழுவதும் காட்சி அளிக்கும் நந்தி சிலை
மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு முழுவதும் காட்சி அளிக்கும் நந்தி சிலை
மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு முழுவதும் காட்சி அளிக்கும் நந்தி சிலை
ADDED : மே 20, 2024 01:37 AM
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால் பண்ணவாடியில் மூழ்கி இருந்த நந்தி சிலை முழு காட்சி அளித்தது.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. அணை நீர்பரப்பு பகுதி, 152 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. அதில், 30க்கும் மேற்பட்ட கிராமங்கள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் இருந்தன. 1925ல் அணை கட்டுமானப்பணி தொடங்கும்போது அங்கு வசித்த மக்கள், உடைமைகளுடன் வெளியேறினர். ஆனால் ஆலயங்கள், வீடுகள், அப்படியே இருந்தன.
அணை நீர்மட்டம், 68 அடியாக சரியும்போது, பண்ணவாடி நீர்பரப்பு பகுதியில் ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலையின் தலை மட்டும், 2 அடி வெளியே தெரியும். நீர்மட்டம் குறையும்போது அச்சிலை முழுதும் படிப்படியாக வெளியே தெரியத்தொடங்கும். நடப்பாண்டு காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நீடித்த வறட்சியால் கடந்த பிப்., 4ல், 70.05 அடியாக இருந்த அணை நீர்மட்டம், பிப்., 5ல், 69.42 அடியாக சரிந்தது. இதையடுத்து நந்தி சிலையின் தலை முகப்பு வெளியே தெரிய தொடங்கியது. நேற்று அணை நீர்மட்டம், 49.57 அடியாக சரிந்ததால், 20 அடி உயர நந்தி சிலை, அதன் பின்புறம், 10 அடி உயரம் கொண்ட கோபுர முகப்பு வெளியே தெரிந்தது.
மேலும் அணை நீர்மட்டம் குறையும்போது நந்தி சிலை சுற்றுப்பகுதியில் விவசாயிகள் சோளம், எள் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்வர். நடப்பாண்டு அப்பகுதியில் தண்ணீர் இன்றி பாளம், பாளமாக வெடித்துள்ளதால், விவசாயிகள் பயிர் சாகுபடி செய்யவில்லை.

