/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வீண்
/
குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வீண்
ADDED : மே 03, 2024 02:43 AM
மேட்டூர்:மேட்டூர் தொட்டில்பட்டி காவிரி கரையோரம் காடையாம்பட்டி கூட்டுக்குடிநீர் திட்ட நீரேற்று நிலையம் உள்ளது. அதன்மூலம் தினமும் 3 கோடி லிட்டர் குடிநீர் எடுத்து காடையாம்பட்டி, ஓமலுார், கோனுார் பகுதிகளுக்கு வினியோகிக்கப்படுகின்றன.
இந்நிலையில் மேட்டூர் - தொப்பூர் நெடுஞ்சாலையில் மேட்டூர் அணை உபரிநீர் செல்லும் பாலத்தில் உள்ள காடையாம்பட்டி குடிநீர் திட்ட குழாயில் நேற்று அதிகாலை 5:30 மணிக்கு உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் பீறிட்டு வெளியேறி நெடுஞ்சாலையில் ஆறாக ஓடியது. இதன்மூலம் குழாயில் சென்று கொண்டிருந்த பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணானது. தகவல் அறிந்த குடிநீர் வாரிய அலுவலர்கள் உடனே குடிநீர் வினியோகத்தை நிறுத்தி சீரமைப்பு பணியை தொடங்கினர். காலை 11:30 மணிக்கு சீரமைத்து மீண்டும் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.