ADDED : ஆக 09, 2024 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சர்வதேச நிலவரப்படி தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக காணப்-படும்.
சில நாட்களாக தங்கம் விலை சரிந்து வருகிறது. கடந்த, 5ல் சேலத்தில் தங்கம் கிராம், 6,470 ரூபாய், பவுன், 51,760 ரூபாய்க்கு விற்றது. தொடர்ந்து தங்கம் விலை சரிந்தது. நேற்று தங்கம் கிராம், 6,350 ரூபாய், பவுன், 50,800 ரூபாய்க்கு விற்ப-னையானது. இதன்மூலம் கிராமுக்கு, 120 ரூபாய், பவுனுக்கு, 960 ரூபாய் சரிந்துள்ளது. அதேபோல் வெள்ளி கிராம், 90 ரூபாய், பார் வெள்ளி, 90,000 ரூபாய்க்கு விற்றது. நேற்று வெள்ளி கிராம், 85.50, பார் வெள்ளி, 85,500 ரூபாயாக குறைந்-துள்ளது.