/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நிலம் கேட்டு குடியேற முயன்ற மக்கள் தடுத்து நிறுத்திய வருவாய்த்துறை
/
நிலம் கேட்டு குடியேற முயன்ற மக்கள் தடுத்து நிறுத்திய வருவாய்த்துறை
நிலம் கேட்டு குடியேற முயன்ற மக்கள் தடுத்து நிறுத்திய வருவாய்த்துறை
நிலம் கேட்டு குடியேற முயன்ற மக்கள் தடுத்து நிறுத்திய வருவாய்த்துறை
ADDED : மே 28, 2024 07:31 AM
ஜலகண்டாபுரம்: ஆதிதிராவிடருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில், குடியேற முயன்ற நபர்களை வருவாய்த்துறை, போலீசார் தடுத்து அனுப்பினர்.
ஜலகண்டாபுரம் அருகே, ஆவடத்துார் கிராமம் காமராஜர் நகரில் ஆதிதிராவிடருக்காக ஒதுக்கப்பட்ட நிலம் உள்ளது. நேற்று மதியம், சூரப்பள்ளியை சேர்ந்த குப்பம்பட்டி காலனி, கட்டிக்காரனுார் காலனி ஆண்கள், பெண்கள் என, 40க்கும் மேற்பட்டோர், தங்களுக்கு நிலம் வழங்ககோரி, 'ெஷட்' அமைக்கும் பொருள்களுடன் காமராஜர் நகரில் திரண்டனர்.
நங்கவள்ளி வருவாய்த்துறை ஆய்வாளர் செந்தில்குமார், ஓமலுார் ஆதிதிராவிடர் நலத்துறை வருவாய் ஆய்வாளர் ரமா, ஜலகண்டாபுரம் போலீசாருடன் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, எங்களுக்கு இதே இடத்தில் பட்டா வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். அப்போது முறையாக விண்ணப்பங்களை வழங்கினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து, அவ்விடத்தை விட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.