/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புளிய மரத்துக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு
/
புளிய மரத்துக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு
ADDED : மே 14, 2024 07:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: புளிய மரத்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆத்துார் அருகே, காட்டுக்கோட்டை ஊராட்சி, ஏழாவது வார்டு பகுதியில், சாலையோரம் புளிய மரங்கள் உள்ளன. அதில் ஒரு புளிய மரம் நேற்று காலை, 10:00 மணியளவில் தீப்பிடித்து எரிந்தது. ஆத்துார் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான வீரர்கள், அரை மணி நேர போராட்டத்துக்கு பின், தீயை அணைத்தனர். புளிய மரத்துக்கு, மர்ம நபர்கள் தீ வைத்தனரா என, ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.

