/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தேர்தல் பணி முடிந்து திரும்பியபோது விபத்தில் ஆசிரியர் பலி
/
தேர்தல் பணி முடிந்து திரும்பியபோது விபத்தில் ஆசிரியர் பலி
தேர்தல் பணி முடிந்து திரும்பியபோது விபத்தில் ஆசிரியர் பலி
தேர்தல் பணி முடிந்து திரும்பியபோது விபத்தில் ஆசிரியர் பலி
ADDED : ஏப் 21, 2024 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி:அயோத்தியாப்பட்டணம் அருகே, கே.எம்.நகரை சேர்ந்தவர் செல்வராஜ், 52. இவர் ராமலிங்கபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்தார்.
தேர்தல் பணிக்கு வீரகனுாரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற அவர், நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு, 'டிஸ்கவர்' பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார்.புதுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே வந்தபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
வாழப்பாடி போலீசார், உடலை மீட்டு விசாரிக்கின்றனர். இறந்த செல்வராஜூக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளனர்.