/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சடலமாக மீட்கப்பட்ட மூவர் ஒரே குடும்பத்தை சேர்ந்தோர்
/
சடலமாக மீட்கப்பட்ட மூவர் ஒரே குடும்பத்தை சேர்ந்தோர்
சடலமாக மீட்கப்பட்ட மூவர் ஒரே குடும்பத்தை சேர்ந்தோர்
சடலமாக மீட்கப்பட்ட மூவர் ஒரே குடும்பத்தை சேர்ந்தோர்
ADDED : மே 06, 2024 01:57 AM
ஜலகண்டாபுரம்: சேலம் அருகே அழுகிய நிலையில் மீட்கப்பட்ட மூன்று பேர், தாய், தந்தை, மகன் என தெரிய வந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே பணிக்கனுாரில் பாலத்தின் அடியில், கடந்த, 3ல், ஒரு பெண், இரு ஆண்கள் என மூவரின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. ஜலகண்டாபுரம் போலீசார் மீட்டு விசாரித்தனர். இடைப்பாடி அருகே பூலாம்பட்டி, அருந்ததியர் காலனியை சேர்ந்த செங்கோடன், 75, அவரது மனைவி செண்டு, 65, அவர்களது மகன் சந்திரசேகரன், 47, என தெரிந்தது. தையல் தொழில் செய்து வந்த சந்திரசேகரன் திருமணம் ஆகாதவர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'பெற்றோருடன் இருந்த சந்திரசேகரன், 10 ஆண்டுகளாக வேலை செய்யவில்லை. அவரது உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வசித்த சிறு வீட்டை, சில வாரங்களுக்கு முன் விற்றனர். கடந்த, 29ல் ஊருக்கு புறப்படுவதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறிச்சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். உடற்கூறு பரிசோதனைக்கு பிறகே, அவர்கள் எப்படி இறந்தார்கள் என தெரிய வரும்' என்றனர்.
போலீஸ் பணிக்கு இடையூறு
2 பேருக்கு நிபந்தனை ஜாமின்
சேலம், மே 6-
சேலம், கொண்டாலம்பட்டி எஸ்.எஸ்.ஐ., குழந்தைவேல் தலைமையில் போலீசார், நேற்று முன்தினம், உத்தமசோழபுரத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, 2 பேர், போலீசாரின் பணியை, மொபைலில் வீடியோ எடுத்தனர். இதுகுறித்து போலீசார் கேட்டதற்கு, 'அப்படி தான் எடுப்போம்' என கூறி, பணிபுரிய விடாமல் தடுத்தனர்.
இதனால் இருவரது மொபைல் போனை பறிமுதல் செய்ததோடு, அவர்களை, கொண்டலாம்பட்டி போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணையில் அவர்கள், அமானி கொண்டலாம்பட்டியை சேர்ந்த அர்ஜூனன், 38, நடராஜன், 32, என தெரிந்தது. குழந்தைவேல் புகார்படி, இருவரும் கைது செய்யப்பட்டு, சேலம் ஜே.எம்.எண்: 5வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணைக்கு பின், இருவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி மாஜிஸ்திரேட் பிரவீன்குமார் உத்தரவிட்டார். அதன்படி அவர்கள், தொடர்ந்து, 30 நாட்களுக்கு, தினமும் காலை, 10:00 மணி, மாலை, 5:00 மணிக்கு அதே நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.