/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வசிஷ்ட நதியில் குதித்த பெண் 1 வாரத்துக்கு பின் சடலமாக மீட்பு வாழப்பாடி, டிச. 8- வாழப்பாடி, பேளூர், கோட்டைமேட்டை சேர்ந்தவர் ராமன், 25. வேட்டைக்காரனுாரை சேர்ந்தவர் சஞ்சா, 20. இவர்கள், 2 ஆண்டுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். கடந்த, 1 இரவு, 10:30 மணிக்கு, வேட்டைக்காரனுார் அருகே வசிஷ்ட நதி ஆற்றில் இருவரும் குதித்தனர். மக்கள் தகவல்படி வாழப்பாடி தீயணைப்பு துறையினர் விரைந

ADDED : டிச 08, 2024 01:29 AM
வசிஷ்ட நதியில் குதித்த பெண்
1 வாரத்துக்கு பின் சடலமாக மீட்பு
வாழப்பாடி, டிச. 8-
வாழப்பாடி, பேளூர், கோட்டைமேட்டை சேர்ந்தவர் ராமன், 25. வேட்டைக்காரனுாரை சேர்ந்தவர் சஞ்சா, 20. இவர்கள், 2 ஆண்டுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். கடந்த, 1 இரவு, 10:30 மணிக்கு, வேட்டைக்காரனுார் அருகே வசிஷ்ட நதி ஆற்றில் இருவரும் குதித்தனர்.
மக்கள் தகவல்படி வாழப்பாடி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, மக்கள் உதவியுடன், ராமனை, உயிருடன் மீட்டனர். ஆனால் சஞ்சாவை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் ஒரு வாரத்துக்கு பின், நேற்று காலை, 8:30 மணிக்கு, பேளூர், ராமநாதபுரத்தில் உள்ள வசிஷ்ட நதியில் பெண் சடலம் மிதந்தது. தீயணைப்பு துறையினர், அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டபோது சஞ்சா என தெரிந்தது.
இதுகுறித்து வாழப்பாடி போலீசார் கூறுகையில், 'ராமன், போதையில் வீட்டுக்கு வந்தபோது, சஞ்சாவுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அவர் கோபித்துக்கொண்டு, வேட்டைக்காரனுாரில் உள்ள தாய் வீட்டுக்கு சாலையில் நடந்து சென்றார். அப்போது பின்தொடர்ந்து சென்ற ராமன், 'தாய் வீட்டுக்கு சென்றால் வசிஷ்ட நதியில் குதிப்பேன்' என கூறியுள்ளார். தொடர்ந்து குதித்தும் விட்டார். இதனால் சஞ்சாவும் குதித்துள்ளார். ஆனால் ராமன் உயிருடன் மீட்கப்பட்டார். சஞ்சா இறந்துவிட்டார். விசாரணை தொடர்ந்து நடக்கிறது' என்றனர்.