/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மூதாட்டியிடம் நுாதனமாக சங்கிலி பறித்த பெண்கள்
/
மூதாட்டியிடம் நுாதனமாக சங்கிலி பறித்த பெண்கள்
ADDED : ஜூலை 04, 2024 11:11 AM
இடைப்பாடி: இடைப்பாடி, சின்னமணலியை சேர்ந்தவர் இருசாயம்மாள், 80. கணவரை இழந்த இவர், மகன் சேகருடன் வசிக்கிறார். நேற்று முன்தினம் சேகர், விசைத்தறி கூடத்திற்கு வேலைக்கு சென்றார். மதியம், 12:30 மணிக்கு இருசாயம்மாள் மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது 40, 45 வயது மதிக்கத்தக்க இரு பெண்கள் வந்து, இருசாயம்மாளிடம் பேச்சு கொடுத்தனர்.
தொடர்ந்து, 'நகராட்சியில் இருந்து வருகிறோம். நீங்கள் வாங்கும், 1,000 ரூபாய்க்கு பதில், மாதம், 2,000 தருகிறோம். அதற்கு உங்களை போட்டோ எடுக்க வேண்டும்' என்றனர்.
பின், 'கழுத்தில் தங்க சங்கிலி போட்டிருந்தால் பணம் கிடைக்காது, அதை கழற்றி விட்டு போட்டோவுக்கு நில்லுங்கள்' என கூறினர். அவரும் சங்கிலியை கழற்றி, அருகில் இருந்த ஒரு டப்பாவில் போட்டு விட்டு போட்டோவுக்கு நின்றார். மூதாட்டியை போட்டோ எடுத்த பெண்கள், அவரது கவனத்தை திசை திருப்பி டப்பாவில் இருந்த சங்கிலியை திருடிக்கொண்டு வெளியே சென்றுவிட்டனர். இதுகுறித்து இருசாயம்மாள் புகார்படி, இடைப்பாடி போலீசார், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.