/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பேன்சி ஸ்டோரில் ரூ.35,000 திருட்டு
/
பேன்சி ஸ்டோரில் ரூ.35,000 திருட்டு
ADDED : மார் 22, 2024 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல்:தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சியை சேர்ந்தவர் சபீனா, 35.
கணவரை பிரிந்து வந்த இவர், பெற்றோர் வீட்டில் வசிக்கிறார். அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, கடையை பூட்டிச்சென்றார். நேற்று காலை, 7:00 மணிக்கு கடைக்கு சென்றபோது, வெளிப்புற கதவு, கடையில் இருந்த டிரா உடைந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், 'டிரா'வில் இருந்த, 35,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. அவர் புகார்படி தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.

