ADDED : செப் 26, 2026 05:33 AM
அ நிறம் | அளவு
வாழப்பாடி; அயோத்தியாப்பட்டணம், அக்ரஹார நாட்டாமங்-கலம், அருள் நகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கிளமன்ட் ராஜ் மரியதாஸ், 46.
இவர் கடந்த, 19 இரவு, 7:00 மணிக்கு, அயோத்தியாப்பட்-டணம் ஒன்றிய கிராம பி.டி.ஓ., ஆரோக்கியநாதன் கென்னடியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து பி.டி.ஓ., புகார்படி, காரிப்பட்டி போலீசார், நேற்று முன்தினம் கிளமன்ட் ராஜ் மரியதாஸை கைது செய்தனர்.போலீசார் கூறுகையில், 'கிளமன்ட் ராஜ் மரி-யதாஸ் வீடு முன் சாலை ஓரம் பள்ளம் உள்-ளதால், மழைநீர் தேங்கி பாம்பு நடமாட்டம் உள்-ளது. இதுகுறித்து அவர், பி.டி.ஓ., - ஊராட்சி செயலர் உள்ளிட்டோரிடம் புகார் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தகாத வார்த்தைகளில் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்தது தெரிந்தது' என்றனர்.
