ADDED : செப் 26, 2026 05:32 AM
பெ.நா.பாளையம்; சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம், இடையப்பட்டி அருகே நெய்ய மலையை சேர்ந்த, விவசாயி கோவிந்தராஜ், 44. இவர் சில மாதங்க-ளுக்கு முன், அவரது மாமனார் மாணிக்கத்தை, நாட்டு துப்பாக்கியால் சுட்ட வழக்கில் சிறை சென்று, சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. 10 நாட்க-ளுக்கு முன் கோவிந்தராஜ் மாயமானார். இதுகு-றித்த புகாரில், ஏத்தாப்பூர் போலீசார் விசாரித்-தனர்.
இந்நிலையில் நெய்யமலை வனப்பகுதியில் கோவிந்தராஜ் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக, ஏத்தாப்பூர் போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், கோவிந்-தராஜ் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.முதல்கட்ட விசாரணை குறித்து போலீசார் கூறு-கையில், 'கோவிந்தராஜ், அவரது மாமனார் மாணிக்கம் இடையே முன்விரோதம் உள்ளது. இப்பிரச்னையில் கோவிந்தராஜ் அவரது மனைவி பழனியம்மாள், பிரிந்து வாழ்கின்றனர். பழனியம்மாளை, கோவிந்த ராஜ் அழைத்தும், அவர் வரவில்லை. இந்நிலையில், அவரை, மாமனார் உள்பட சிலர் கூட்டு சேர்ந்து கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடக்கிறது' என்றனர்.
