/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கிளி, மான் கொம்பு பதுக்கிய மூவர் கைது
/
கிளி, மான் கொம்பு பதுக்கிய மூவர் கைது
ADDED : ஏப் 23, 2024 10:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்:சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே கீரிப்பட்டியில் தேவேந்திரன், 60, என்பவர் வீட்டில், தம்மம்பட்டி வனச்சரகர் முருகேசன் உள்ளிட்ட வனத்துறையினர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.
அப்போது வீட்டில் இருந்த, மூன்று கிளிகள் மற்றும் மான் கொம்புகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தேவேந்திரன், அவரது மகன்கள் கர்ணன், 27, மணிவாசகம், 25, ஆகியோருக்கு, தலா, 5,000 வீதம், 15,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

