/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எருதாட்டத்தில் காளை முட்டி மூன்று பேர் காயம்
/
எருதாட்டத்தில் காளை முட்டி மூன்று பேர் காயம்
ADDED : ஜூலை 18, 2024 02:01 AM
தாரமங்கலம்: தாரமங்கலம் அருகே, பெரியாம்பட்டியில் ஆடி பிறப்பை-யொட்டி, எருதாட்டம் நேற்று நடந்தது.
இதில் ஊர் காளைக்கு அங்குள்ள விநாயகர் கோவிலில், பூஜை செய்து, செம்பு மாரியம்மன் கோவிலை சுற்றி வந்து எரு-தாட்டம் துவங்கியது. தொடர்ந்து, மாரியம்மன் கோவில் வளா-கத்தில் எருதுகளை பிடித்து வீரர்கள் சுற்றி வந்தனர். எருதாட்-டத்தில் பாதுகாப்பிற்கு இரும்பு தடுப்புகள் போடப்பட்டிருந்தது. இருந்தும் காளைகள் தாக்கியதில் காயம்பட்ட முருகன், 60, கவுரி, 37, மாரியம்மாள், 60, ஆகியோர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 60க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. சில காளைகள் பார்வையாளர்கள் பக்கம் சென்றதால், அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.
தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.