/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டிராக்டரில் மட்டுமே மண் எடுக்க அனுமதி ஏமாற்றத்துடன் திரும்பிய டிப்பர் லாரிகள்..
/
டிராக்டரில் மட்டுமே மண் எடுக்க அனுமதி ஏமாற்றத்துடன் திரும்பிய டிப்பர் லாரிகள்..
டிராக்டரில் மட்டுமே மண் எடுக்க அனுமதி ஏமாற்றத்துடன் திரும்பிய டிப்பர் லாரிகள்..
டிராக்டரில் மட்டுமே மண் எடுக்க அனுமதி ஏமாற்றத்துடன் திரும்பிய டிப்பர் லாரிகள்..
ADDED : ஜூலை 18, 2024 02:14 AM
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியில், நேற்று டிராக்டர்களில் மட்டுமே வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டதால், டிப்பர் லாரிகளை கொண்டு வந்த டிரை-வர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
மேட்டூர் அணையில், தின்னப்பட்டி, மூலக்காடு, கொளத்துார், கோட்டையூர் ஆகிய நான்கு பகுதிகளில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதைய-டுத்து, வண்டல் மண் அள்ளும் பணி கடந்த, 15ல் மூலக்காடு நீர்-பரப்பு பகுதியில் துவங்கியது.
நேற்று முன்தினம், சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து செம்மண் அள்ளி செல்வதற்காக, டிப்பர் லாரிகளை உரி-மையாளர்கள் கொண்டு வந்தனர். டிராக்டரில் மட்டுமே மண் எடுக்க அனுமதிப்போம் என கூறியதால், டிரைவர்கள், பொதுப்ப-ணித்துறை ஊழியர்கள் இடையே மோதல்
ஏற்படும் சூழல் உருவானது.
இறுதியாக, ஏற்கனவே செம்மண் ஏற்றிய லாரிகள் மட்டும், அதனை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. நேற்று வழக்கம் போல டிப்பர் லாரிகள் செம்மண் அள்ள மூலக்காடு நீர்-பரப்பு பகுதிக்கு வந்தது. ஆனால், பொதுப்பணித்துறை ஊழி-யர்கள் அனுமதி தராததால், லாரிகள் சாலையோரம் நீண்ட வரி-சையில் நிறுத்தி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கொளத்துார் போலீஸ் ஸ்டேஷனில் முத்தரப்பு
பேச்சுவார்த்தை நடந்தது. மேட்டூர் தாசில்தார் ரமேஷ் தலை-மையில் நடந்த கூட்டத்தில் கொளத்துார் இன்ஸ்பெக்டர் தேவராஜ், விவசாயிகள், டிப்பர் லாரி டிரைவர்கள்
பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தை முடிவில், டிராக்டர்களில் மட்டுமே மண் அள்ள வேண்டும். நீர்பரப்பு பகுதியில் ஒரு மீட்டர் ஆழம் மட்டுமே வண்டல் மண் எடுக்க வேண்டும். அதற்கு மேல் வேறு இடத்தில் எடுக்க வேண்டும் என, முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, மண் ஏற்றாமல் டிரைவர்கள் தங்கள் டிப்பர் லாரிக-ளுடன் புறப்பட்டு சென்றனர்.