/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பணம் பறிக்கும் கும்பல் டிப்பர் லாரி ஓனர்கள் புகார்
/
பணம் பறிக்கும் கும்பல் டிப்பர் லாரி ஓனர்கள் புகார்
பணம் பறிக்கும் கும்பல் டிப்பர் லாரி ஓனர்கள் புகார்
பணம் பறிக்கும் கும்பல் டிப்பர் லாரி ஓனர்கள் புகார்
ADDED : பிப் 27, 2025 01:26 AM
ஓமலுார்:சேலம் மாவட்டம் ஓமலுார் டி.எஸ்.பி., அலுவலகத்தில், கோட்டைமேட்டுப்பட்டியில் உள்ள, டிப்பர் லாரி, பொக்லைன் உரிமையாளர் சங்கத்தலைவர் சரவணபூபதி உள்ளிட்டோர் நேற்று அளித்த புகார் மனு:
சின்னதிருப்பதி, குண்டுக்கல் பகுதிகளில் இருந்து, உரிய அனுமதி பெற்று, 'எம்-சாண்ட்', ஜல்லி, கிராவல் எடுத்து வருகிறோம். ஆனால், வழியில் உள்ள ஏனாதி, செம்மாண்டப்பட்டி ஆகிய பகுதிகளில், 25 முதல், 35 வயது வரை உள்ள பலர், லாரியை வழிமறித்து, 2,000 முதல், 10,000 ரூபாய் வரை மிரட்டி பணம் பறிக்கின்றனர்.
பணம் கொடுத்தால் மட்டும் லாரியை விடுகின்றனர். ஆண்டு முழுதும் இப்பிரச்னை தொடர்கிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியிருந்தனர்.