/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கடை ஒதுக்கீட்டில் முறைகேடு பாதிக்கப்பட்ட வியாபாரிகள் புகார்
/
கடை ஒதுக்கீட்டில் முறைகேடு பாதிக்கப்பட்ட வியாபாரிகள் புகார்
கடை ஒதுக்கீட்டில் முறைகேடு பாதிக்கப்பட்ட வியாபாரிகள் புகார்
கடை ஒதுக்கீட்டில் முறைகேடு பாதிக்கப்பட்ட வியாபாரிகள் புகார்
ADDED : ஜூன் 11, 2024 05:46 AM
சேலம் : சேலம் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., சாலையோர வியாபார தொழிலாளர் சங்க தலைவர் மோகன் தலைமையில் வியாபாரிகள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து மோகன் கூறியதாவது:
சேலத்தில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், வ.உ.சி., பூ மார்க்கெட், காய்கறி மார்க்கெட் புதுப்பிக்கப்பட்டன. அங்கு ஏற்கனவே கடை வைத்து வியாபாரம் செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடை ஒதுக்கப்படும் என, மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது. ஆனால் இரு மார்க்கெட்டுகளையும் ஒப்பந்தம் எடுத்தவர், மாநகராட்சி அறிவித்தபடி, 27 வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்காமல், 3 முதல், 10 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்று, புது வியாபாரிகளுக்கு எந்த ஆவணமுமின்றி கடைகளை வழங்கி லட்சக்கணக்கில் முறைகேடாக பணம் சம்பாதித்து வருகிறார். இதுதொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பையும் கண்டுகொள்ளவில்லை. இதற்கு மாநகராட்சி அதிகாரிகளும் உடந்தை. அதனால் கலெக்டர், இந்த விவகாரத்தில் தலையிட்டு பல தலைமுறையாக கடை நடத்தி வந்தவர்களுக்கு மீண்டும் கடையை ஒதுக்கி, முறைகேடு வசூலை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.