/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் நகர சாலைகளில் போக்குவரத்து நெரிசல்
/
சேலம் நகர சாலைகளில் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜூன் 09, 2024 04:37 AM
சேலம்: நாளை பள்ளி திறப்பு என்பதால், அதற்குரிய பொருட்கள் கொள்முதல் செய்ய கடைகளுக்கு ஏராளமானோர் படையெடுத்தனர்.
முகூர்த்த நாள் என்பதால், விழாக்களுக்கு செல்வோரும் அதிக அளவில் கிளம்பியதால், சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
தமிழகம் முழுவதும், நாளை அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. இரண்டு மாதங்களாக கோடை விடுமுறையை அனுபவித்த குழந்தைகளை, பள்ளிக்கு அனுப்ப தயார் செய்யும் பணியில் பெற்றோர் இறங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான பேக், ஷூ, லஞ்ச் பாக்ஸ் என பொருட்களை வாங்குவதற்காக, நேற்று முதல் கடைகளில் குவிய தொடங்கினர். பள்ளி பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
வைகாசி மாத வளர்பிறை முகூர்த்தம் என்பதால், இன்று அனைத்து மண்டபங்களிலும் திருமணம், வரவேற்பு
உள்ளிட்ட விழாக்கள் நடக்கவுள்ளன. இவற்றுக்கு ஆயிரக்கணக்கானோர் கிளம்பியதால், நேற்று மாலை, சேலம் நகரின் அனைத்து சாலைகளிலும் வாகனங்கள்
அணிவகுத்தன.
ஒவ்வொரு சிக்னலிலும் நீண்ட நேரம் காத்திருந்து செல்ல நேர்ந்ததால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
பல இடங்களில் போலீசார் இல்லாததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.