ADDED : மே 12, 2024 07:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம் : பள்ளிப்பாளையம் பாலம் சாலையில், சாலை விரிவாக்க பணி நடப்பதால், ஒரு வழிப்பாதையாக செல்லும் வகையில் சாலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி வாகனங்கள் ஒருவழிப்பாதையில் செல்வதால், நேற்று மாலை, 5:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டூவீலர் கூட சீராக செல்ல முடியாதளவுக்கு வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
காலை, இரவு நேரத்தில் இந்த ஒரு வழிப்பாதையில் வாகனங்கள் சீராக செல்லும் வகையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.