/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏற்காடு மலைப்பாதையில் மரங்கள் எரிந்து சாம்பல்
/
ஏற்காடு மலைப்பாதையில் மரங்கள் எரிந்து சாம்பல்
ADDED : ஏப் 09, 2024 02:15 AM
ஏற்காடு:சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சேர்வராயன் குகை கோவில் அருகில் உள்ள வனப்பகுதி தீப்பற்றி, பல ஏக்கரில் உள்ள மரங்கள் எரிந்து சாம்பலானது.சேலம் மாவட்டத்தில் இரண்டு மாதமாக, வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஏற்காடு வனப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டு அரியவகை மூலிகைகள், மரம் செடி, கொடிகள் எரிந்து நாசமானது. இந்நிலையில், நேற்று இரவு ஏற்காடு சேர்வராயன் குகை கோவில் உள்ள மலை வனப்பகுதியில், காட்டு தீ ஏற்பட்டு மரங்கள் எரிய தொடங்கின. ஏற்காடு தீயணைப்பு துறையினர், வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் மிகவும் பள்ளமான பகுதியில் தீ பற்றி எரிவதால், தீயணைப்பு துறையினர் தீ எரியும் பகுதிக்கு செல்ல முடியாமல் திணறி வருகின்றனர்.

