/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வள்ளியப்பா - சீத்தா சதாபிேஷகம் சோனா கல்லுாரி பேராசிரியர்கள் வாழ்த்து
/
வள்ளியப்பா - சீத்தா சதாபிேஷகம் சோனா கல்லுாரி பேராசிரியர்கள் வாழ்த்து
வள்ளியப்பா - சீத்தா சதாபிேஷகம் சோனா கல்லுாரி பேராசிரியர்கள் வாழ்த்து
வள்ளியப்பா - சீத்தா சதாபிேஷகம் சோனா கல்லுாரி பேராசிரியர்கள் வாழ்த்து
ADDED : ஜூலை 28, 2024 03:36 AM
சேலம்: பூலாங்குறிச்சியில், சொக்கலிங்கம் செட்டியார் - மீனாட்சி ஆச்சி தம்பதியரின் மகனாக பிறந்தவர் வள்ளியப்பா. தற்போது சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக், -சோனா கல்லுாரி தலைவரான இவர், பள்ளி கல்வியை சேலத்திலும், கல்லுாரி படிப்பை, சென்னை பச்-சையப்பன் கல்லுாரியிலும் முடித்தவர். அவர், சீத்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு, சொக்கு, தியாகு என, இரு ஆண் மகன்கள். விசா-லாட்சி சொக்கு, சீதா தியாகு என இரு மருமகள்கள். வள்ளி-யப்பா, பழனியப்பா, க்ருஷிதா, சோனாக்ஷி என, 4 பேரன், பேத்-திகள். ஒவ்வொரு வெற்றிகர ஆணுக்கு பின்னால் ஒரு பெண் இருப்பார் என்ற வார்த்தையை மெய்ப்பிக்க வந்தவர் போல் சீத்தா, வள்ளியப்பாவுக்கு உள்ளார்.
ஜவுளி, ரியல் எஸ்டேட், கட்டுமானம், கல்வி, விவசாயம், தொழில்நுட்பம் என எண்ணற்ற துறைகளில் வள்ளியப்பா வெற்றி கண்டார். தியாகராஜர் பாலிடெக்னிக், -சோனா வளா-கத்தில், சேலத்தில் உயர்ந்த கட்டடமாக, 150 அடி உயரத்தில், 'வள்ளியப்பா பிளாக்' கட்டப்பட்டுள்ளது. இது அவரது கட்டடக்-கலைக்கு சிறந்த சான்று.
கடந்த, 67 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தியாகராஜர் பாலி-டெக்னிக், சோனா தொழில்நுட்பக் கல்லுாரி, தொடர்ந்து தேசிய, மாநில அளவில் பல்வேறு விருதுகளை பெற்று வருகின்றன. சேலம் சுகவனேஸ்வரர், ராஜகணபதி, காசிவிஸ்வநாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவராக ஆன்மிக சேவையில் வள்ளி-யப்பா ஈடுபட்டு வருகிறார்.
தற்போது சதாபிஷேகம் காணும் வள்ளியப்பா - சீத்தா ஆகியோர் நலமுடன் வாழ, தியாகராஜர் பாலிடெக்னிக், -சோனா கல்லுாரி முதல்வர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் சார்பில் வாழ்த்துகிறோம் என, தியாகராஜர் பாலிடெக்னிக் முதல்வர் கார்த்திகேயன் தெரி-வித்தார்.