/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'வருங்கால முதல்வர் திருமாவளவன்' பேனரில் வி.சி., கட்சியினர் விளம்பரம்

ADDED : செப் 15, 2024 04:00 AM
ஆத்துார்: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்.,2ல், கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்குமாறு அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., த.வெ.க., தலைவர் விஜய் ஆகியோருக்கும் திருமாவளவன் அழைப்பு விடுத்தார்.
தி.மு.க., கூட்டணியில் உள்ள நிலையில், அ.தி.மு.க.,வுக்கு விடுத்த அழைப்பு பேசுபொருளாக மாறியது.இந்நிலையில் வி.சி., கட்சியினர், சேலம் மாவட்ட பகுதிகளில், மாநாடு குறித்து சுவர் விளம்பரம், பேனர் வைத்து வருகின்றனர். இதில் ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே ஒரு பேனர் ஒட்டியுள்ளனர். அதில், 'வருங்கால முதல்வரே' என, திருமாவளவனை குறிப்பிட்டுள்ளனர். இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.