/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏலச்சீட்டு நடத்தி மோசடி பாதிக்கப்பட்டவர்கள் புகார்
/
ஏலச்சீட்டு நடத்தி மோசடி பாதிக்கப்பட்டவர்கள் புகார்
ஏலச்சீட்டு நடத்தி மோசடி பாதிக்கப்பட்டவர்கள் புகார்
ஏலச்சீட்டு நடத்தி மோசடி பாதிக்கப்பட்டவர்கள் புகார்
ADDED : ஜூன் 25, 2024 01:55 AM
சேலம்: சேலம் மாவட்டம், ஓமலுார் அடுத்த தொளசம்பட்டி கரியன்காட்டு வளைவை சேர்ந்த, 20க்கும் மேற்பட்டோர் ஒருசேர திரண்டு நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதன்பின் அவர்கள் கூறியதாவது: எங்கள் பகுதியை சேர்ந்த கோபி என்பவர், மாத ஏலச்சீட்டு நடத்தினார். ஒரு லட்சம் முதல், 5 லட்ச ரூபாய் வரையிலான இனங்களில் பலர் சேர்த்து, பணம் செலுத்தி வந்தோம். தற்போது ஏலச்சீட்டு முதிர்வு பெற்றும், பணத்தை தராமல் போக்குகாட்டி வருகிறார். பலமுறை கேட்டும் பணம் தராத காரணத்தால், தொளசம்பட்டி போலீசில் புகார் அளித்தோம். அங்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பாதிக்கப்பட்ட, 50 பேருக்கு சேர வேண்டிய, 1.2 கோடி ரூபாயை மீட்டு தருவதுடன், எங்களை ஏமாற்றிவரும் கோபி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.