ADDED : ஆக 11, 2024 02:56 AM
மேட்டூர்: கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., - கபினி அணைகளின் நீர்மட்டம், 124, 65 அடிகள். இரு அணைகளும் நேற்று காலை நிரம்பியிருந்-தது. இந்நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் குறைந்ததால், இரு அணைகளின் நீர்வரத்து வினாடிக்கு, 19,277 கன அடியாக இருந்த நிலையில் நேற்று, 16,962 கனஅடியாக சரிந்தது. அதேபோல் இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு, 18,000 கனஅடியாக இருந்த உபரிநீர் திறப்பு, நேற்று காலை, 16,000 கனஅடியாக சற்று குறைக்கப்பட்டது.
அதேநேரம் மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த, 8ல் நிரம்பியிருந்த அணை, நேற்று முன்தினம், 119.59 அடியாக சரிந்தது. ஆனால் நேற்று முன்தினம் வினாடிக்கு, 5,258 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து, நேற்று, 6,548 கனஅடி-யாக சற்று அதிகரித்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு வினா-டிக்கு, 12,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. திறப்பை விட வரத்து குறைவாக இருந்ததால் நேற்று, 119.24 அடியாக சரிந்தது.