/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? வணிகர்களே... நீங்களே எழுதுங்க!
/
ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? வணிகர்களே... நீங்களே எழுதுங்க!
ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? வணிகர்களே... நீங்களே எழுதுங்க!
ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? வணிகர்களே... நீங்களே எழுதுங்க!
ADDED : செப் 16, 2024 03:52 AM
ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்து ஏழு ஆண்டுகளாகிவிட்டது. 'பிரச்னைகள்' இன்னும் ஓய்ந்தபாடில்லை. வணிகர்கள் பலர், அன்றாடம் பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளில் சிலரோ, அவர்களை மிரட்டி தங்களின் 'பைகளை' நிரப்பிக் கொள்கிறார்கள்.
'ஜி.எஸ்.டி.,யால் பயன்' என்று ஒரு தரப்பும்; 'பெரும் பாதிப்பு' என, மறுதரப்பும் வாதிடுகிறார்கள். ஆனால், எந்த விதத்தில் பாதிப்பு, அதற்குத் தீர்வு என்ன, என்ற தெளிவான கருத்தாய்வு இல்லை.
தவறு எங்கே நடக்கிறது? வரிமுறையை அரசு அமல்படுத்தியதிலா அல்லது அமல்படுத்தும் அதிகாரமுடைய அதிகாரிகள் மட்டத்திலா என்பது ஆழமாக ஆராயப்பட வேண்டிய ஒன்று.இதற்கு நிரந்தரத் தீர்வு காண, 'காலைக்கதிர்' உங்களுக்குக் களம் அமைக்கிறது.
'ஜி.எஸ்.டி.,- தீர்வைத்தேடி!'
ஜி.எஸ்.டி., நிர்ணயத்தில், வரி செலுத்துவதில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், தீர்வுக்கான எதிர்பார்ப்புகள் என எதுவாயினும்உங்களின் கருத்துக்களை எங்களுக்கு அனுப்புங்கள். 'காலைக்கதிர்' நாளிதழில் வெளியாகி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை பெறும்.
தீர்வு காணும் வரை, 'காலைக்கதிர்' உங்களுக்குத் தோளோடு தோள் நிற்கும். கருத்து அனுப்புவோரின் பெயர் விவரங்கள் அவர்கள் விரும்பினால் மட்டுமே வெளியிடப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
ஜி.எஸ்.டி.,- தீர்வைத்தேடி!
காலைக்கதிர், எம்.ஜி.ரோடு,
நியூ பேர்லேண்ட்ஸ், சேலம் - 636016.