/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பள்ளியில் 'வசூல்' கல்வித்துறை கவனிக்குமா?
/
பள்ளியில் 'வசூல்' கல்வித்துறை கவனிக்குமா?
ADDED : ஜூன் 14, 2024 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி, இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 1,500க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். அங்கு தற்போது, 6 முதல், பிளஸ் 1 வரை சேர்க்கை நடக்கிறது. ஆனால் சேர்க்கையின்போது, இரு நாட்களாக மாணவர்களிடம், 'கட்டாய வசூல்' செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக, 6 முதல், 8ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு, 170 ரூபாய்; 9, 10ம் வகுப்புக்கு, 195 ரூபாய்; பிளஸ் 1 வகுப்புக்கு, 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக, மாணவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சேலம் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க, மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.