/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெண்ணுக்கு கத்திக்குத்து நீதிமன்றத்தில் வாலிபர் சரண்
/
பெண்ணுக்கு கத்திக்குத்து நீதிமன்றத்தில் வாலிபர் சரண்
பெண்ணுக்கு கத்திக்குத்து நீதிமன்றத்தில் வாலிபர் சரண்
பெண்ணுக்கு கத்திக்குத்து நீதிமன்றத்தில் வாலிபர் சரண்
ADDED : ஆக 17, 2024 04:43 AM
சேலம்: இளம் பெண்ணை கத்தியால் குத்திய வழக்கில், தேடப்பட்ட வாலிபர், சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
ஆட்டையாம்பட்டி, தம்பிதுரை தெருவை சேர்ந்தவர் பாலகி-ருஷ்ணன், 30, இவரது மனைவி சவுந்தர்யா, 26. பாலகிருஷ்ண-னுக்கும், ஆட்டையாம்பட்டியை சேர்ந்த நவீன்குமார், 28, என்ப-வரின் தங்கைக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறி, இருவ-ருக்கும் முன்விரோதம் இருந்தது. கடந்த, 14ல், நவீன்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் ஐந்து பேர், பாலகிருஷ்ணன் வீட்டில் நுழைந்து, அவரை கத்தியால் குத்த முயன்றனர். இதில், குறுக்கே வந்த சவுந்தர்யா காயமடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் வந்ததால், அவர்கள் தப்பியோடினர். நவீன்-குமார் உள்ளிட்ட ஆறு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்-தனர். போலீசாரால் தேடப்பட்ட நவீன்குமார், நேற்று சேலம் ஜே.எம்.எண்-4 நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை நீதி-மன்ற காவலில் வைக்க, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

