/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கடைகள் ஆக்கிரமிப்பு அகற்ற 1 நாள் அவகாசம்
/
கடைகள் ஆக்கிரமிப்பு அகற்ற 1 நாள் அவகாசம்
ADDED : ஜூலை 03, 2025 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர், ஜமேட்டூர், சதுரங்காடி தினசரி சந்தையில், 15 ஆண்டுக்கு முன் தரைத்தளத்தில், 14, மேல்தளத்தில், 13 என, 27 கடைகளுடன் வணிக வளாகம் கட்டப்பட்டது. நகராட்சியில் ஏலம் எடுத்த வியாபாரிகள், தரைத்தளத்தில் உள்ள, 8 கடைகளுக்கு முன், 10 முதல், 15 அடி நீளம் வரை ஆக்கிரமித்து பழம், பூக்கடைகளுக்கு உள்வாடகைக்கு விட்டனர்.
இதனால் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நேற்று காலை, நகராட்சி வருவாய் ஆய்வாளர் வாசுதேவன், துப்புரவு பணியாளர்கள் பொக்லைனுடன் சென்றனர். அப்போது கடை வியாபாரிகளுடன் பேச்சு நடத்தியதில், ஒருநாள் அவகாசம் கேட்டனர். அதன்படி அவகாசம் வழங்கிவிட்டு, அலுவலர்கள் சென்றனர்.