/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
1 கிலோ கஞ்சா பறிமுதல் விற்றவருக்கு 'காப்பு'
/
1 கிலோ கஞ்சா பறிமுதல் விற்றவருக்கு 'காப்பு'
ADDED : அக் 25, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், சீலநாயக்கன்பட்டி, ஒன்பதாம் பாலிக்காட்டில் நேற்று முன்தினம், அன்னதானப்பட்டி போலீசார், 'ரோந்து' சென்றனர்.
அப்போது சந்தேகப்படும்படி சுற்றியவரை பிடித்து விசாரித்ததில், தாதகாப்பட்டி, அண்ணா நகரை சேர்ந்த ரமேஷ், 25, என தெரிந்தது. அவரது பையில் சோதனை செய்தபோது, 1 கிலோ, 200 கிராம் கஞ்சாவை விற்க வைத்திருந்தது தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

