/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
8 நாட்களுக்கு பின் 1 டி.எம்.சி., உயர்வு
/
8 நாட்களுக்கு பின் 1 டி.எம்.சி., உயர்வு
ADDED : டிச 29, 2024 08:53 AM
மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழகம் - கர்நாடகா எல்லையில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில், மழை தீவிரம் குறைந்ததால், நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு, 2,886 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று, 2,701 கனஅடியாக சற்று குறைந்தது. அணையில் இருந்து குடிநீர், பாசனத்துக்கு, 500, கால்வாயில், 300 கனஅடி நீர் திறக்கப்பட்டது. வரத்தை விட திறப்பு குறைவாக உள்ளதால், நேற்று முன்தினம், 119.63 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று, 119.72 அடியாக சற்று உயர்ந்தது.
கடந்த, 21ல், 92 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு, நேற்று, 93.02 டி.எம்.சி.,யாக உயர்ந்தது. 8 நாளுக்கு பின், 1 டி.எம்.சி., உயர்ந்துள்ளது. அணை நிரம்ப இன்னும், 0.45 டி.எம்.சி., மட்-டுமே தேவை என்பதால், ஓரிரு நாட்களில் நடப்பாண்டில், 3ம் முறை, மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்புள்ளது.

