/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கரும்பு தோட்டத்தில் 10 அடி நீளமுள்ள மலை பாம்பு மீட்பு
/
கரும்பு தோட்டத்தில் 10 அடி நீளமுள்ள மலை பாம்பு மீட்பு
கரும்பு தோட்டத்தில் 10 அடி நீளமுள்ள மலை பாம்பு மீட்பு
கரும்பு தோட்டத்தில் 10 அடி நீளமுள்ள மலை பாம்பு மீட்பு
ADDED : டிச 31, 2024 07:43 AM
ஆத்துார்: கரும்பு தோட்டத்தில் இருந்த, 10 அடி நீளமுள்ள ராட்சத மலை பாம்பை, தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
ஆத்துார் அருகே, தென்னங்குடிபாளையம் ஊராட்சி, மாரியம்மன் நகரை சேர்ந்தவர் காளியண்ணன், 50. இவர், தனது தோட்டத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். நேற்று கரும்பு வெட்டும் பணியில், 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். கரும்பு தோட்டத்தினுள், 10 அடி நீளம் கொண்ட 'ராட்சத' மலை பாம்பு ஊர்ந்து செல்வதை, தொழிலாளர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து, ஆத்துார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின், 10 அடி நீளம்கொண்ட 'ராட்சத' மலை பாம்பை உயிருடன் பிடித்தனர். பின், ஆத்துார் வனத்துறையினரிடம் பாம்பை ஒப்படைத்தனர்.