/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
10 மயில்கள் சாவு விஷம் வைத்து கொலை?
/
10 மயில்கள் சாவு விஷம் வைத்து கொலை?
ADDED : டிச 12, 2025 08:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: இளம்பிள்ளை அருகே சித்தர்கோவில் அடிவாரத்தில் உள்ள லகு-வம்பட்டி ஏரிக்கரையில், 10 மயில்கள் செத்து கிடப்பதாக நேற்று மாலை, இரும்பாலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற பின் போலீசார் கொடுத்த தகவல்படி, வனத்துறையினர் சென்று, இறந்து கிடந்த, 10 மயில்களின் உடல்களை எடுத்து வந்து, கால்நடைத்துறையிடம் ஒப்படைத்து இறப்புக்கான காரணம் குறித்து அறிக்கை கேட்டனர்.
முதல்கட்ட விசாரணையில், பயிர்கள் சேதத்தை தடுக்க, விவசா-யிகள் யாரும் விஷம் கலந்த தானியங்களை துாவி, அதை மயில்கள் தின்றதால் இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

