/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தேசிய அளவில் 600 மீ., ஓட்டத்தில் வெள்ளி செந்தில் பப்ளிக் பள்ளி மாணவிக்கு பாராட்டு

ADDED : டிச 12, 2025 08:44 AM

சேலம்: மத்திய பிரதேசம் இந்துாரில், 'ஸ்கூல் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா' சார்பில், 14 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் பிரிவு தேசிய தடகள போட்டி, கடந்த நவ., 30 முதல், டிச., 5 வரை நடந்தது. அதில், சேலம் செந்தில் பப்ளிக் பள்ளி, 8ம் வகுப்பு மாணவி லக்ஷ்யா, 600 மீ., ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்றார்.
இந்நிலையில், செந்தில் பப்ளிக் பள்ளியில், 11வது, 'நன்றி தெரி-விக்கும் நாள்' நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. அதில் மாணவி லக்ஷ்யாவுக்கு பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது. அதில் நரசுஸ் சாரதி இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, புரோ சேர்மன் ஐஸ்வர்யா நிதிஷ், மாணவி லக்ஷ்யாவை பாராட்டினார். தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து, லக்ஷ்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதில் பள்ளி நிர்வாக குழு தலைவர் செந்தில் கந்தசாமி, துணை தலைவர் மணிமேகலை, செயலர் தனசேகர், தாளாளர் தீப்தி, சி.இ.ஓ., சுந்தரேசன், முதன்மை முதல்வர் ஸ்ரீநிவாசன், முதல்வர் மனோகரன், நிர்வாக அலுவலர் பிரவீன் குமார், துணை முதல்வர் நளினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.