/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பணியில் அலட்சியமாக இருந்த 10 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்: சேலம் எஸ்.பி.,அதிரடி
/
பணியில் அலட்சியமாக இருந்த 10 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்: சேலம் எஸ்.பி.,அதிரடி
பணியில் அலட்சியமாக இருந்த 10 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்: சேலம் எஸ்.பி.,அதிரடி
பணியில் அலட்சியமாக இருந்த 10 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்: சேலம் எஸ்.பி.,அதிரடி
ADDED : ஜன 21, 2025 06:13 AM
ஆத்துார்: வழிப்பறி சம்பவங்களை தடுக்கும் வகையில், சேலம் மாவட்-டத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்த பணியில் அலட்சியமாக இருந்த, 10 பேரை பணியிடம் மாற்றம் செய்து, எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மற்றும் தென் மாவட்டங்களில், இரு தினங்களுக்கு முன் ஒரே நாளில், 10க்கும் மேற்பட்ட வழிப்பறி சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து, தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிக-ளிலும், வாகன சோதனை மேற்கொள்ள போலீசார் அறிவுறுத்-தினர். பஸ், ரயில், வாடகை கார்கள், சொந்த வாகனங்கள் என வழக்கத்தை விட, அனைத்து
போக்குவரத்துகளும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதுபோன்ற நெரிசல் மற்றும் நெருக்கடி மிகுந்த நேரங்களில், வாகன போக்கு-வரத்து குறித்து, போலீசார் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்-தப்பட்டது.அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்துார், வாழப்பாடி, மேட்டூர், ஓமலுார், சங்ககிரி, சேலம் ரூரல் உள்பட ஆறு சப்-டி-விசன் பகுதியில், 35 இடங்களில் போலீசார் கண்காணிப்பு மேற்-கொண்டனர். சுங்கச்சாவடி, மாவட்ட,
மாநில, தேசிய நெடுஞ்-சாலை உள்பட அனைத்து பகுதிகளிலும் ஜன., 26 வரை, தினமும் ஆறு மணி நேரம் கார், வேன், பைக், மொபட் உள்பட அனைத்து வாகனங்களிலும் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் நடந்த வாகன சோதனையின்போது, பணியில் அலட்சியமாக இருந்த வீரகனுார், ஆத்துார் ரூரல், மகுடஞ்சாவடி, நங்கவள்ளி உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும், 10 போலீசாரை ஆயுதப்படைக்கு மாற்றம்
செய்து, சேலம் எஸ்.பி., கவுதம்கோயல் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, சேலம் எஸ்.பி., கவுதம்கோயல் கூறுகையில், ''வழிப்பறி போன்ற குற்றச்-சம்பவங்களை தவிர்க்கவும், வாகனங்களில் ஆயுதங்கள் எடுத்தும் செல்லும் நபர்களை கண்டறியும் வகையில், வாகன சோதனை நடந்து வருகிறது. பணியில்
அலட்சியமாக இருந்த, 10 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்,'' என்றார்.

