/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பொறியாளர் வீட்டில் 10 பவுன் திருட்டு
/
பொறியாளர் வீட்டில் 10 பவுன் திருட்டு
ADDED : ஜூலை 27, 2025 12:49 AM
மேட்டூர், :மேட்டூர், கருமலைக்கூடல், சமத்துவபுரம், சண்முகநகரை சேர்ந்த தனியார் நிறுவன பொறியாளர் வினோத்குமார், 33. மனைவி சவீதா. இவர்களது மகன் தர்ஷித். இவர்களுடன் வினோத்
குமாரின் தாய் வளர்மதி, தம்பி விஜயகுமாரும் வசிக்கின்றனர்.
நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு வினோத்குமார் குடும்பத்துடன் வீட்டின் உள் அறையிலும், வளர்மதி கதவை திறந்துவைத்து வெளியேயும் துாங்கியுள்ளனர். நள்ளிரவு வீடு புகுந்த மர்ம நபர், பீரோவில் இருந்த, 10 பவுன் நகை, மடிக்கணினி, மொபைல் போன், 1,000 ரூபாய் என, 1.30 லட்சம் ரூபாய் மதிப்பில் பொருட்களை திருடிச்சென்றுள்ளார். இது, காலையில் தெரியவர, வினோத்குமார் புகார்படி, கருமலைக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.
அதே பகுதியில் சென்னை யில் உள்ள தனியார் வங்கி
யில் பணிபுரியும் அரவிந்த் என்பவரது வீடு உள்ளது. துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க, மேட்டூர் வந்த அரவிந்த், நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீடு முன் நிறுத்தப்பட்டிருந்த, ஸ்பிளண்டர் பைக் திருடுபோனது. அதன் மதிப்பு, 10,000 ரூபாய். அரவிந்த் புகார்படி, கருமலைக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.