/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குற்றத்துக்கு திட்டமிட்ட 10 ரவுடிகள் கைது
/
குற்றத்துக்கு திட்டமிட்ட 10 ரவுடிகள் கைது
ADDED : ஜன 06, 2025 02:33 AM
மேட்டூர்: மேட்டூர், மாதையன்குட்டை அருகே, வாகனங்களை நிறுத்தி, ஆயுதங்களால் தாக்கி பணம், நகையை பறிக்க, 5 ரவுடிகள் திட்ட-மிட்டனர். இதை அறிந்து, மேட்டூர் போலீசார் விசாரித்து, மேட்டூர், பிள்ளையார் கோவில் தெரு ராமு, 44, மீன்கார தெரு சிவகுமார், 30, வாய்க்கால் பாலம் தமிழரசன், 30, பொன்னகர் ஜீவா, 32, மட்டச்சாலை வல்லரசு, 32, ஆகிய ரவுடிகளை கைது செய்தனர்.
அதேபோல் மேட்டூர், ஜீவா நகர் மூர்த்தி, 34, ஹவுசிங் போர்டு நிவாஸ், 28, மேட்டூர் முனியப்பன் கோவில் தெரு சுரேஷ்குமார், 35, காவேரிபாலம் முருகன், 32, பொன்னகர் மாதேஷ், 29, ஆகிய ரவுடிகளை, கொளத்துார் போலீசார் கைது செய்து, கத்தி, உருட்டுக்கட்டை, மிளகாய்துாளை பறிமுதல் செய்தனர்.

