ADDED : ஜன 04, 2025 02:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், ஜன. 4-
சேலம், ஜங்ஷன் அருகே புது ரோட்டில் இருந்து சூரமங்கலம் செல்லும் சாலையில் உள்ள ஒரு வளாகத்தில், 10 கடைகள் உள்ளன. அங்கு நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து, கடைகளை பூட்டிச்சென்றனர். நேற்று காலை கடைக்கு வந்தபோது, ஷட்டர்கள் உடைக்கப்
பட்டிருந்தன.
இதை அறிந்து, அங்கு வந்து சூரமங்கலம் போலீசார் பார்த்தபோது, சலுான், மெடிக்கல், ஜெராக்ஸ் உள்பட, 10 கடைகளின் ஷட்டர்களும் உடைக்கப்பட்டிருந்தன. அதில் திருவாக்கவுண்டனுாரை சேர்ந்த ஜெயந்தி, 53, நடத்தும் பத்திரப்
பதிவு அலுவலகத்தில், 15,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது.
மற்ற கடைகளில் கொள்ளை போகவில்லை. இருப்பினும், 'சிசிடிவி'யில் பதிவான காட்சிகளை, போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஷட்டர்களை உடைக்கும் காட்சி பதிவாகி இருந்தது. அதை வைத்து, போலீசார் விசாரிக்கின்றனர்.