/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விபத்தில் சிக்கிய பஸ் 10 மாணவர்கள் காயம்
/
விபத்தில் சிக்கிய பஸ் 10 மாணவர்கள் காயம்
ADDED : அக் 16, 2025 01:46 AM
சேலம், வாழப்பாடியை சேர்ந்தவர் மணி, 35. தனியார் கல்லுாரி பஸ் டிரைவரான இவர், நேற்று, சேலத்தில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு, மல்லசமுத்திரத்தில் உள்ள கல்லுாரிக்கு ஓட்டிச்சென்றார்.
காலை, 8:30 மணிக்கு, சேலம், கந்தம்பட்டி மேம்பாலத்தில் சென்றபோது, முன்புறம் ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை, அதன் டிரைவரான, ராசிபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் நிறுத்தினார்.
அப்போது கல்லுாரி பஸ், அரசு பஸ்சின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 10 மாணவர்கள் காயம் அடைந்தனர். சூரமங்கலம் போலீசார், மாணவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். துாய்மைப்பணியாளர்கள் மூலம், உடைந்து சிதறிக்கிடந்த கண்ணாடி துகள்கள் அகற்றப்பட்டன. தொடர்ந்து பஸ்சை அப்புறப்படுத்தி, போலீசார்
போக்குவரத்தை சீர்படுத்தினர்.