ADDED : அக் 16, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மேட்டூர் தாலுகா அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் ஜான் பெர்ணான்டஸ் தலைமை வகித்தார்.
முழுமையாக பார்வை திறனற்றோரை, மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் சேர்த்தல்; பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சி அளிப்பதோடு லேப்-டாப், ஸ்மார்ட் போன் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாவட்ட தலைவர் அமலாராணி, செயலர் குணசேகரன், துணைத்தலைவர் உமாகாந்த், வட்ட தலைவர் பவுல்ராஜ், மாவட்ட குழு நிர்வாகிகள் பங்கேற்றனர்.