/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வேளாண் அலுவலகத்தில் 10 டன் விதை நெல் இருப்பு
/
வேளாண் அலுவலகத்தில் 10 டன் விதை நெல் இருப்பு
ADDED : ஜூலை 03, 2025 02:22 AM
மேட்டூர், மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாயில் ஒரு மாதத்துக்கு முன்பாக நேற்று முன்தினம் மாலை பாசனத்துக்கு, 500 கனஅடி நீர் திறக்கப்பட்டது. மேட்டூர் வட்டம் கோல்நாயக்கன்பட்டி ஊராட்சியில், 687.5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில், 80 சதவீத நிலத்தில் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்வர். வழக்கமாக ஆகஸ்டில் நாற்று நடவு செய்து, செப்டம்பர் முதல் வாரம் நடவு பணி தொடங்கும். நடப்பாண்டு பாசனத்துக்கு முன்னதாக நீர் திறந்துள்ளதால் சில விவசாயிகள் நெல் சாகுபடியை முன்னதாக தொடங்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில் கொளத்துார் வேளாண் அலுவலர்கள் கூறியதாவது:
கொளத்துார் வட்டாரத்தில் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்ய, வேளாண் மையத்தில், வெள்ளை பொன்னி, 2 டன், ஏ.டீ.டி., 45 ரகம், 3 டன், கோ 51 - 1.5 டன், கோ55 - 3.5 டன் என, 10 டன் விதை நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அந்த விதை நெல்லை விவசாயிகள் மானிய விலைக்கு வாங்கி சாகுபடி செய்து பலனடைய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.