/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'அனலாக்' முறையில் வழங்கிய100 கேபிள் இணைப்பு துண்டிப்பு
/
'அனலாக்' முறையில் வழங்கிய100 கேபிள் இணைப்பு துண்டிப்பு
'அனலாக்' முறையில் வழங்கிய100 கேபிள் இணைப்பு துண்டிப்பு
'அனலாக்' முறையில் வழங்கிய100 கேபிள் இணைப்பு துண்டிப்பு
ADDED : ஏப் 25, 2025 02:15 AM
ஆத்துார்சேலம் கேபிள் 'டிவி' தாசில்தார் முத்துராஜ் தலைமையில் அலுவலர்கள், ஆத்துார் அருகே தம்மம்பட்டியில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, அ.ம.மு.க., பிரமுகரான, தனியார் ஆப்ரேட்டர் ராஜன், 43, 'டிராய்' தடை செய்துள்ள அனலாக்(கேபிள் ஒயர்) முறையில் கேபிள் இணைப்புகளை வழங்கியிருந்தது தெரிந்தது.
இதுகுறித்து முத்துராஜா கூறியதாவது: ஆய்வில், 100க்கும் மேற்பட்ட இணைப்புகள், அனலாக் முறையில் ஒளிபரப்பியது தெரிந்ததால், அதற்கான உபகரணங்கள் அகற்றப்பட்டன. அந்த இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு எச்சரிக்கை செய்துள்ளோம். முறைகேடாக கேபிள் ஒளிபரப்பியவர் மீது, மின்வாரியம், தம்மம்பட்டி போலீசில் புகார் அளிக்க உள்ளோம்.
அரசிடம் அனுமதி பெற்று, செட்டாப் - பாக்ஸ் மூலம் கேபிள் இணைப்புகள் வழங்க வேண்டும். இதுபோன்று, 'அனலாக்' முறையில் இணைப்பு வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.