/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
100 நாள் பெண் தொழிலாளர்கள் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகை
/
100 நாள் பெண் தொழிலாளர்கள் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகை
100 நாள் பெண் தொழிலாளர்கள் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகை
100 நாள் பெண் தொழிலாளர்கள் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகை
ADDED : ஜூன் 03, 2025 01:20 AM
மகுடஞ்சாவடி, மகுடஞ்சாவடி பி.டி.ஓ., அலுவலகத்தை, 100 நாள் தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில்
ஈடுபட்டனர்.மகுடஞ்சாவடி ஒன்றியத்திற்கு உட்பட்ட, அ.தாழையூர் ஊராட்சியில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு, பல்வேறு குழுக்களாக பிரித்து சுழற்சி முறையில் பணி வழங்கப்பட்டு வருகிறது.
இதில், சில குழுவினருக்கு அதிக நாட்கள் வேலை வழங்குவதாகவும், சிலருக்கு சில நாட்கள் மட்டுமே வேலை வழங்குவதாகவும் கூறப்படுகிறது. அனைத்து குழுவினருக்கும், சமமான அளவில் வேலை வழங்க வேண்டும் என கூறி நேற்று மதியம், 12:20 மணியளவில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் மகுடஞ்சாவடி பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து, மகுடஞ்சாவடி பி.டி.ஓ.,சக்தியேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து கலைந்து
சென்றனர்.